Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

கொசு ஒழிப்பு பணியாளர்கள் பணி வழங்க கோரி தர்ணா போராட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூர், ஆக.29: ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணியில் உள்ள ஒப்பந்த பணியாளர்கள் பணி வழங்க கோரி, நகராட்சி அலுவலகத்தில் திடீர் தர்ணா போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணியில் 2013ம் ஆண்டு முதல் தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலம் தினக்கூலி அடிப்படையில் 50 பேர் பணியாற்றி வருகின்றனர். இரு முறை கூலி உயர்வு வழங்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக இவர்களுக்கு பணி வழங்கப்படவில்லை. எனவே தங்களுக்கு பணி வழங்க வேண்டும் என கோரி ஏற்கனவே இவர்கள் கீழ ரத வீதி, தெற்கு ரத வீதி சந்திப்பு பகுதியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் திடீரென நகராட்சி அலுவலகத்தில் மாடியில் உள்ள அலுவலகத்திற்கு செல்லும் வழியில் யாரும் செல்ல முடியாத வகையில், தங்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் சிஐடியு ஊரக வளர்ச்சி துறை சங்கத்தின் மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியம், சிபிஎம் கட்சியின் நகர செயலாளர் ஜெயக்குமார், சிஐடியு நிர்வாகி திருமலை, சிஐடியு மாவட்ட குழுவைச் சேர்ந்த வீர சதானந்தம் உட்பட பலர் கலந்து கொண்டனர். தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்களுக்கு பணி வழங்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினர். சுமார் ஒரு மணி நேரம் நீடித்தந்த போராட்டத்தினால் நகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.