Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

2 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

வில்லிபுத்தூர், ஜூலை 29: வில்லிபுத்தூர் அருகே நத்தம்பட்டி காவல்நிலைய எஸ்.ஐ உதயசூரியன் மற்றும் போலீசார், நத்தம்பட்டி டோல்கேட் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், அரசால் தடை செய்யப்பட்ட 2.25 கிலோ புகையிலைப் பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார், அதனை பறிமுதல் செய்து லாரியை ஓட்டி வந்த ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து(31) என்பவரை கைது செய்தனர். மேலும் லாரியையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.