Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

சமையல் தொழிலாளி தற்கொலை

சிவகாசி, ஜன. 28: சிவகாசி அருகே உடல்நலம் பாதிக்கப்பட்ட சமையல் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சிவகாசி அருகே ஆலமரத்துப்பட்டி புதூரைச் சேர்ந்தவர் குமார்(42) . இவர் சமையல் வேலை செய்து வந்தார். கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து தகவல் அறிந்த கிழக்கு போலீசார் குமாரின் வீட்டிற்கு சென்று அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து குமாரின் மனைவி காளீஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.