Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பொதுமக்களை அச்சுறுத்திய கதம்ப வண்டுகள் அழிப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர், ஜூலை 27: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வந்த கதம்ப வண்டுகள் அழிக்கப்பட்டன. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள நாச்சியார்பட்டி பகுதியில் மரம் ஒன்றில் ஏராளமான கதம்ப வண்டுகள் கூடு கட்டி இருந்தன. இவை அவ்வப்போது அந்த வழியாக செல்லும் பொதுமக்களை விரட்டி கடித்தன. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் இருந்து வந்தனர்.

இது குறித்து அந்தப் பகுதியை சேர்ந்தவர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்பு துறை அதிகாரி சுந்தரராஜனுக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பெயரில் சுந்தரராஜன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்த கதம்ப வண்டுகளை தீ வைத்து அழித்தனர். இதனால் பொதுமக்கள் நிம்மதியடைந்தனர்.