சிவகாசி, செப். 26: சிவகாசியில் வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக சங்க நிர்வாகி கபில் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வாரத்துக்கு, 5 நாள் வேலை திட்டத்தை அமல்படுத்தல், அனைத்து ஓய்வூதியர்களுக்கும் ஒரே மாதிரி, டி.ஏ., மற்றும் பென்ஷன் திட்டங்களை அமல்படுத்தல், ஒன்றிய அரசு தன்னிச்சையாக அறிவித்திருக்கும், பி.எல்.ஐ., திட்டத்தை திரும்ப பெறுதல் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். நிர்வாகிகள் வேலுச்சாமி, கார்த்திக், மூர்த்தி, பிரதீப் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டன. 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
+
Advertisement


