அருப்புக்கோட்டை, செப். 26: அருப்புக்கோட்டையில் திருமண மண்டபத்தில் பணம் திருடியவரை போலீசார் கைது செய்தனர். அருப்புக்கோட்டை நேரு நகர் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (30). இவர் காந்திநகர் பைபாஸ் ரோடு பகுதியில் திருமண மண்டபம் நடத்தி வருகிறார். திருமண மண்டப கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள், டேபிள் டிராயரில் வைத்திருந்த ரூ.6 ஆயிரத்தை திருடி சென்றனர். இதுகுறித்து விஜயகுமார் கொடுத்த புகாரின் பேரில் அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். போலீசார், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவை ஆய்வு செய்ததில், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் செல்லியம்மன் கோயில் தெருவை சேர்ந்த குமார் (56) என்பதும், இவர் மீது பேரையூர், முதுகுளத்தூர், கடலாடி, இளஞ்செம்பூர் காவல்நிலையங்களில் பல குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, இவரை போலீசார் கைது செய்து பணத்தை பறிமுதல் செய்தனர்.
+
Advertisement


