Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

ஸ்ரீவில்லி. பெரிய பெருமாள் சன்னதியில் ஆவணி மாத பவித்ர உற்சவம் தொடக்கம்

ஸ்ரீவில்லிபுத்தூர், ஆக. 26: விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் வளாகத்தில் உள்ள பெரிய பெருமாள் சன்னதியில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் பவித்ர உற்சவம் தொடங்கி 7 நாட்கள் நடைபெறும். இதன்படி இந்தாண்டு பவித்ர உற்சவம் நேற்று முன் தினம் தொடங்கியது. இதையொட்டி பெரியபெருமாள், பூமாதேவி, ஸ்ரீதேவி சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பவித்ர உற்சவத்திற்காக வேதபிரான் பட்டர் குடும்பத்தினரால் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட மஞ்சள் நிறமாலைகள் பெரியபெருமாளுக்கும், பூமாதேவி, ஸ்ரீதேவிக்கும் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதற்கான ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி சக்கரை அம்மாள் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.