Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

அருப்புக்கோட்டை வாலிபர் கொலையில் போதை இளைஞர் கைது

அருப்புக்கோட்டை, ஆக. 28: விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மதுபான கடை அருகே, வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் டிஎஸ்பி விக்னேஷ், அருப்புக்கோட்டை நகர் இன்ஸ்பெக்டர் சுஜாதா தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

அங்குள்ள சிசிடிவியில் இளைஞர் ஒருவர், அவரை கை பிடித்து அழைத்துச் சென்றது பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் போலீசார், அருப்புக்கோட்டை அருகே போடம்பட்டியை சேர்ந்த கருப்பசாமியை(21) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அருப்புக்கோட்டை வடக்கு துரைராஜபுரம் தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர்(49). டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங் முடித்துவிட்டு வேலைக்குச் செல்லாமல் மது பாட்டில்களை சேகரித்து அதனை விற்று தினமும் மது அருந்தி வந்துள்ளார். இதில் கட்டிட வேலைக்கு செல்லும் கருப்பசாமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தினந்தோறும் மது அருந்தி வந்துள்ளனர். சம்பவத்தன்று, சந்திரசேகர் மது போதையில் நடக்க முடியாமல் தள்ளாடியபடி சென்றுள்ளார்.

இதனால் சந்திரசேகர் அவரை கை தாங்கலாக பிடித்து மதுபான கடையில் இருந்து வெளியே அழைத்துச் சென்றுள்ளார். அப்போது போதையில் இருந்த சந்திரசேகர், தன்னை யாரோ இழுத்துச் செல்வதாக நினைத்து அசிங்கமாக திட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கருப்பசாமி, கீழே கிடந்த காலி மது பாட்டிலால் சந்திரசேகரை சரமாரியாக குத்தி உள்ளார். இதில் அவர் உயிரிழந்தது தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து போலீசார், வழக்குப் பதிந்து கருப்பசாமியை கைது செய்தனர்.