Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

மின்சாரம் தாக்கி பள்ளி மாணவி பலி

விருதுநகர், ஆக.28: விருதுநகர் அருகே மாடன் நகரில் மின்சாரம் தாக்கி பள்ளி மாணவி நேற்று முன்தினம் பலியானார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகர் அருகே மீசலூரைச் சேர்ந்தவர் அரவிந்தன். இவரது மகள் காருண்யா ஸ்ரீ (15). தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். விளையாட்டு வீரரான இவர், நேற்று முன்தினம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் விளையாடிவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இந்த நிலையில் அவரது தந்தை அரவிந்தன் வேலை நிமித்தமாக வெளியில் சென்று விட்டார். வீட்டின் மாடி அருகே மின் கம்பம் வழியாக வயர் சென்றுள்ளது.

மாடிக்கு சென்ற மாணவி காருண்யா ஸ்ரீ மீது எதிர்பாராத விதமாக, மின்சார வயர் பட்டதில் தூக்கி எறியப்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக அவரை மீட்டு, விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர். மாணவியை பரிசோதனை செய்த டாக்டர், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார். அவரது தந்தை அரவிந்தன் அளித்த புகாரின் பேரில் சூலக்கரை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.