விருதுநகர், ஆக. 26: விருதுநகர் அருகே கடம்பன்குளம் பகுதியில் டூவீலர் மீது லாரி மோதியதில் சம்பவ இடத்தில் பெண் ஒருவர் நேற்று பலியானார். விருதுநகர் அருகே ஆவுடையாபுரம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் ஷாகிராபானு(46). இவர் விருதுநகரில் உள்ள வங்கிக்கு செல்வதற்காக தனது சகோதரர் பக்ருதீன்(41) ஓட்டிச் சென்ற டூவீலரின் பின்னால் அமர்ந்து சென்றார். கடம்பன்குளம் சந்திப்புச் சாலையருகே சென்றுகொண்டிருந்த போது, பின்னால் வந்த லாரி மோதியதில் இருவரும் தடுமாறிக் கீழே விழுந்தனர். இதில், சம்பவ இடத்தில் ஷாகிராபானு பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த பக்ருதீன் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து லாரி டிரைவர் ரத்தினசாமி(36) என்பவர் மீது சூலக்கரை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
+
Advertisement



