Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

தாய்க்கு மிரட்டல் விடுத்த மகன் கைது

சாத்தூர், செப்.25: சாத்தூர் அருகே அம்மாவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த மகனை போலீசார் கைது செய்தனர்.சாத்தூர் அருகே பெரியகொல்லப்பட்டியை சேர்ந்தவர் அய்யம்மாள் (51). இவருக்கு மாடசாமி(37), அய்யனார் (32), முத்துலட்சுமி (30) ஆகியோர் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் முடிந்து தனித்தனியாக உள்ளனர். இந்நிலையில் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு அய்யம்மாளை விட்டு விட்டு கணவர் பிரிந்து சென்றுவிட்டார். தற்போது தனியாக வசித்து வரும் அய்யம்மாளிடம் மூத்த மகன் மாடசாமி அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார்.நேற்று முன்தினம் அம்மாவிடம் பணம் கேட்டுள்ளார். கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்தவர் அம்மாவை கையால் தாக்கி கீழே தள்ளிவிட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து அய்யம்மாள் கொடுத்த புகாரில் இருக்கன்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாடசாமியை கைது செய்தனர்.