Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம்

விருதுநகர், ஜூன் 25: பொதுமக்களில் முதியோர் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம், மாற்றுத்திறனாளி ஓய்வூதியம், கணவரால் கைவிடப்பட்டோர் ஓய்வூதியம் மற்றும் இதர ஓய்வூதியம் பெற தகுதியுடைய நபர்கள் தாங்கள் குடியிருக்கும் வட்டத்தில் உள்ள தாசில்தார் அலுவலக இ-சேவை மையம் மற்றும் பொது சேவை மையங்களில் இணைய வழி வாயிலாக விண்ணப்ப மனுக்களை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யும் போது குடும்ப அட்டை, ஆதார் அட்டை, புகைப்படம், வங்கி கணக்குப் புத்தகம் மற்றும் வறுமைக்கோட்டு பட்டியல் எண் ஆகியவற்றுடன் பதிவு செய்ய வேண்டும். மாற்றுத்திறனாளியாக இருந்தால் அடையாள அட்டை நகலுடன் விண்ணப்பிக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.