Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ராஜபாளையத்தில் சிறுவர்களுக்கான சிந்தனை முகாம்

ராஜபாளையம், மே 25: ராஜபாளையம் சக்கராஜா கோட்டை நூலக வளாகத்தில், விருதுநகர் மாவட்ட பகுத்தறிவாளர்கள் கழகம் மற்றும் பாரதி வாசகர் வட்டம் இணைந்து, பெண்கள் மற்றும் சிறுவர் சிறுமிகளுக்கான சிந்தனை முகாமினை நடத்தியது. இந்த முகாமில் சுற்றுச்சூழல் குறித்து ஓவியப்போட்டியும், தந்தை பெரியாருக்கு முன் மற்றும் பின் தமிழ்நாடு என்ற தலைப்பில் பேச்சுப் போட்டியும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஞானராஜ் தலைமை வகித்தார். பெத்தையா, முத்தரசன், மஞ்சு ரங்கநாதன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். திருப்பதி வரவேற்புரையற்றினார். இதில், ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமியர் பேச்சுப்போட்டி மற்றும் ஓவிய போட்டிகளில் கலந்துகொண்டனர். அவற்றில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழும் நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி முடிவில் நூலகர் முத்துலட்சுமி நன்றியுரை கூறினார்.