Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ராகுல் காந்தி கைது காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்

விருதுநகர், ஜூலை 24: டெல்லியில் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து விருதுநகரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நீட் தேர்வு முறைகேடு கண்டித்து டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா தளம் சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் வீட்டை முற்றுகையிட முயன்ற போது போலீசார் கைது செய்தனர். ராகுல் காந்தி கைதை கண்டித்து விருதுநகர் தேசபந்து மைதானத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் நகர் காங்கிரஸ் தலைவர் நாகேந்திரன், காங்கிரஸ் கவுன்சிலர்கள் செல்வ ரத்னா திலக், பால்பாண்டி மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் வெயில் முத்து, சிவகுருநாதன் உள்பட 58 பேர் கலந்து கொண்டனர்.