திருச்சுழி, அக்.23: அருப்புக்கோட்டை அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அசோக் (48). பெயிண்டிங் தொழிலாளி. இவர், திருச்சுழி அருகே இயங்கி வரும் ஒரு தனியார் நூற்பாலையில் பெயிண்டிங் அடிக்கும் பணிக்காக சென்றார். அங்கு சாரத்தில் இருந்து எதிர்பாராதவிதமாக அசோக் தவறி விழுந்து இறந்தார்.
இச்சம்பவம் குறித்து திருச்சுழி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றி பணியில் ஈடுபடுத்தியதாக பெயிண்டிங் காண்ட்ராக்டர் டேவிட் லிவிங்ஸ்டன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


