Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

வில்லிபுத்தூர் அருகே மீன்வெட்டி பாறை அருவியில் காட்டாற்று வெள்ளப்பெருக்கு: பொதுமக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை

வில்லிபுத்தூர், செப். 23: வில்லிபுத்தூர் அருகே, மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் மீன்வெட்டி பாறை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், அருவி, நீரோடைகளில் குளிக்க வேண்டாம் என பொதுமக்களுக்கு வனத்துறை எச்சரித்துள்ளது.விருதுநகர் மாவட்டம், வில்லிபுத்தூர் அருகே, மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், மலைப்பகுதியில் உள்ள அருவிகள், காட்டாற்று ஓடைகளில் மழை நீர்வரத்து அதிகரித்துள்ளது.

குறிப்பாக ராக்காச்சி அம்மன் கோவில் பகுதியில் உள்ள அருவியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தால், நீரோடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதேபோல மீன்வெட்டி பாறை அருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், செண்பகத்தோப்பு பேச்சி அம்மன் கோவில் பின்புறம் உள்ள ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. காட்டாற்று ஓடைகள், அருவிகளில் மழைநீர் வரத்து அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் யாரும் குளிக்க வேண்டாம் என வில்லிபுத்தூர் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.