சிவகாசி, செப். 23: சிவகாசி அருகே சிவகாமிபுரம் காலனியில் விஸ்வநத்தம் விஏஓ காளியப்பன் மற்றும் வருவாய் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் சட்டவிரோதமாக பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து விஏஓ சிவகாசி கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார். இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அங்கிருந்த ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.
சம்பவம் குறித்து வெற்றிலையூரணியை சேர்ந்த சீனிவாசகன் என்பவர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோன்று கீழத்திருத்தங்கல் விஏஓ லோகநாதன் செய்த ஆய்வில் செல்லையநாயக்கன்பட்டியை சேர்ந்த துரைச்சாமி (46) என்பவர் தனது வீட்டில் சட்ட விரோதமாக ரூ.1 லட்சத்து 37 ஆயிரம் மதிப்புள்ள பட்டாசுகளை பதுக்கி வைத்தது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் துரைச்சாமி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


