Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

இறால் பண்ணைகளால் விவசாய நிலங்கள் பாதிப்பு: மக்கள் புகார்

சாயல்குடி, ஜூன் 23: பத்தனேந்தல் பகுதியில் உள்ள உப்பளம், இறால் பண்ணைகளால் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு வருவதாக, மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கிராம மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர். இது குறித்து பத்தனேந்தல் கிராம மக்கள் கூறும்போது, ராமநாதபுரம் அருகே உள்ள வெண்ணத்துார் பஞ்சாயத்து பத்தனேந்தல் கிராம பகுதியில் 300 ஏக்கர் விவசாய நிலத்தில் ஆண்டு தோறும் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இப்பகுதியில் தனியார் நிலப்பகுதி மட்டுமின்றி அரசு புறம்போக்கு இடத்தை ஆக்கிரமித்து சிலர் உப்பளம், இறால் பண்ணை அமைத்துள்ளனர்.

இதற்கு பாய்ச்சப்படும் கடல் நீர், விவசாய நிலங்களில் பாய்ந்து விவசாய நிலத்தை பாதித்து வருகிறது. இதனால் எதிர்காலத்தில் இயற்கையான மண் வளம் பாதிக்கப்பட்டு விவசாயம் பாதிக்கும் அபாயம் உள்ளது. மேலும் நிலத்தடி நீரும் பாதிக்கும் நிலை உள்ளது. எனவே இப்பகுதியில் விவசாய நிலம் பாதிக்கும் நிலையில் இயங்கி வரும் தனியார் உப்பளம் மற்றும் இறால் பண்ணை செயல்பாட்டை தடுத்து நிறுத்தி, தடை விதிக்க வேண்டும் என்றனர்.