Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா

ராஜபாளையம், ஜூன் 23: தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ராஜபாளையத்தில் 500க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. ராஜபாளையத்தில் தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. ராஜபாளையம் தென்றல் நகரில் நடைபெற்ற விழாவிற்கு தவெக நிர்வாகிகள் சித்ரா பாரதி, கார்த்திக் தலைமை வகித்தனர். இதில் ஏழை, எளிய மக்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கணவனால் கைவிடப்பட்ட மற்றும் கணவரை இழந்த 15 தாய்மார்களுக்கு இலவச தையல் எந்திரங்கள் வழங்கப்பட்டன.

குடும்பத்தின் முதல் இளம் பெண் பட்டதாரிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. 125 ஆதரவற்ற குழந்தைகளுக்குக் கல்வி உபகரணங்கள் மற்றும் பள்ளிச் சீருடைகள் வழங்கப்பட்டது. 40க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு மளிகைப் பொருட்கள், புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது. 150க்கும் மேற்பட்ட மகளிர் அணியினருக்கு புத்தாடைகள் என மொத்தம் 500க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. விழாவின் நிறைவாக சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு அசைவ விருந்து வழங்கப்பட்டது.