Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

விசாக திருவிழா தொடக்கம்

சிவகங்கை, மே 23: நாட்டரசன்கோட்டையில் சிவகங்கை தேவஸ்தானம் சமஸ்தானத்திற்குட்பட்ட பிரசித்தி பெற்ற கண்ணுடையநாயகி அம்மன் கோவில் வைகாசி மாதம் விசாக திருவிழா நேற்று காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று மாலை 6.30 மணிக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் 7ம் திருநாள் மே 28 இரவு 6 மணிக்கு தங்கரதம், 8ம் திருநாள் மே 29 இரவு 7.25 மணிக்கு மேல் வெள்ளிரதம், 9ம் திருநாள் மே 30 காலை 10.30 மணி முதல் 11.10 மணிக்குள் தேரோட்டம் உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகள் நடக்க உள்ளது. மே 31ல் 10ம் திருநாள் பூப்பல்லக்கு, முயல் குத்துதல் நிகழ்ச்சிகளுடன் விழா நிறைவடைகிறது. தினமும் பல்வேறு அலங்காரங்களில் அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெறுகிறது.