Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நகை திருடிய வழக்கில் 6 பேர் அதிரடி கைது

சாயல்குடி, ஜூன் 19: நகை திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் கைது செய்து, தங்க நகைகளை மீட்டனர். கடலாடி மற்றும் சிக்கல் மற்றும் ராமநாதபுரம் கேணிக்கரை பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்க நகை வழிப்பறி சம்பவங்கள் நடந்தது. இதனையடுத்து அந்தந்த காவல் நிலைய போலீசார் மர்ம நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கண்காணிப்பு காமிராக்கள் பதிவு காட்சிகளை ஆய்வு செய்தும், ரகசியமாக விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் கடலாடி, சிக்கல் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டதாக கருப்பையா, வீரமணி, ராமச்சந்திரன், ஈஸ்வரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 10 சவரன் தங்க நகைகள் மீட்கப்பட்டது. இதுபோன்று கேணிக்கரை பகுதியில் இருசக்கர வாகனத்தில் முகமூடி அணிந்து வந்து பெண்ணிடம் வழிப்பறி செய்த வழக்கில் சுரேஷ் (எ) சூரியா, மூர்த்தி (எ) முருகேசன் ஆகிய இருவரையும் கேணிக்கரை போலீசார் கைது செய்தனர்.