Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ரேஷன் கடைக்கு புதிய கட்டிடம்

திருவாடானை, ஜூன் 19: திருவாடானை அருகே அரசூர் பகுதியில் கடந்த பல ஆண்டுகளுக்கு மேலாக ரேஷன் கடை தனியாருக்கு சொந்தமான ஓட்டு கொட்டகையில் செயல்பட்டு வருகிறது. இந்த ரேஷன் கடை மூலம் சுமார் 250க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் பயனடைந்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக இந்த ரேஷன்கடை செயல்பட்டு வரும் தனியாருக்கு சொந்தமான ஓட்டு கொட்டகையின் சுவர்களிலும், தளத்திலும் விரிசல் ஏற்பட்டு சேதமடைந்துள்ளதால் எவ்வித பாதுகாப்பு வசதியும் இன்றி தற்சமயம் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.

இதனால் இந்த ரேஷன் கடைக்கு நுகர்பொருட்கள் வாங்கச்செல்லும் அப்பகுதி பெண்கள் வரை அனைவரும் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டு விடுமோ? என்ற அச்சத்துடன் சென்று வருகின்றனர். ஆகையால் அந்த பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு துணை சுகாதார நிலையம் அருகில் காலியாக உள்ள இடத்தில் புதிய ரேஷன் கடை கட்டிடம் கட்டித் தந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டுமென அப்பகுதி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.