Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

பேருந்து நிலையத்தில் விரைவில் குடிநீர் வசதி

காரியாபட்டி, செப்.18: காரியாபட்டி பேருந்து நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி மற்றும் பாலூட்டும் அறை வசதிகள் செய்து தரப்படும் என்று பேரூராட்சி தலைவர் செந்தில் தெரிவித்தார். காரியாபட்டி பேரூராட்சி பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் மற்றும் சுகாதார பணிகள் குறித்து பேரூராட்சி தலைவர் செந்தில் ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது, பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் வசதிக்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் தாய்மார்கள் பாலூட்டும் அறை அமைக்கப்பட்டு உள்ளது. இது விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று தெரிவித்தார்.பேருந்து நிலையத்தில் டீக்கடை மற்றும் உணவகம், ஜுஸ் கடைக்காரர்கள், குப்பைகள், கழிவுநீர் தேங்காமல் தினமும் அப்புறப்படுத்த வேண்டும்.தூய்மை பணி மேற்பார்வை யாளர்கள் இவற்றை தினமும் கண்காணிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.