சிவகாசி, செப்.18: சிவகாசி அருகே நாரணாபுரம் புதூர் பகுதியில் கிழக்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒரு கோவில் அருகில் அதே பகுதியை சேர்ந்த துரைப் பாண்டி (38) என்பவர் சட்ட விரோதமாக ஷாட் வகை பட்டாசு களை தயாரித்தது தெரியவந்தது. அதனை தொடர்ந்து துரைப்பாண்டியை கைது செய்த போலீசார் பட்டாசு தயாரிக்க பயன்படுத்திய மணி மருந்து உள்ளிட்ட மூலப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.
+
Advertisement


