சிவகாசி, ஆக.18:சிவகாசிசாத்தூர் ரோடு மயிலாடும்துறை பகுதியில் கிழக்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள ஒரு கட்டிடத்தில் உரிய அனுமதியின்றி 67 பெட்டிகளில் ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான பல்வேறு வகையான பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. இவற்றை பறிமுதல் செய்த போலீசார் ராஜசேகர்(43) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக போலீசார் அந்தோணிராஜ் (39) என்பவரை தேடி வருகின்றனர்.
+
Advertisement



