திருச்சுழி ஜிஹெச் செல்லும் வழியில் சிதிலமடைந்த வாறுகால் பாலத்தால் அடிக்கடி விபத்து: உடனே சீரமைக்க கோரிக்கை
திருச்சுழி, மே 18: திருச்சுழியில் அரசு மருத்துவனை செயல்பட்டு வருகிறது. இம்மருத்துவனைக்கு தினந்தோறும் நரிக்குடி, வீரசோழன், பனையூர், பள்ளிமடம் உள்பட 100க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சை பெற வந்து செல்கின்றனர். மேலும் அருப்புக்கோட்டையிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் சாலை பிரதான சாலையாக இருப்பதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு அவரச சிகிச்சைக்கு வருபவர்கள் திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் கொண்டு வரப்படுகின்றனர். திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு முன்பாக குறுக்கே உள்ள வாறுகால் (பாலம்) முற்றிலும் சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் காட்சியளிக்கிறது. இதனால் அவசர காலங்களில் நோயாளிகளை ஏற்றி வரும் 108 ஆம்புலன்ஸ் வாகனம் கூட மருத்துவமனைக்குள் செல்ல முடியாமல் தவிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.


