சிவகாசி, மே 18: சிவகாசியில் திருத்தங்கல் கே.கே.நகரை சேர்ந்தவர் பாண்டீஸ்வரன். ஈரோட்டில் உள்ள ஒரு அச்சகத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி முருகேஸ்வரி(31). இவர், திருத்தங்கலில் மகன்களுடன் வசித்து வந்தார். சம்பவத்தன்று அதே பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு வீட்டிற்கு திரும்பி உள்ளார். பின்னர் வீட்டின் சமையல் அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து திருத்தங்கல் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
+
Advertisement
