சிவகாசி, அக்.17: சிவகாசி அருகே லாரி மோதி மூதாட்டி உயிரிழந்தார். சிவகாசி அருகே ஈஞ்சார் நாகலாபுரத்தை சேர்ந்தவர் சுப்புதாய்(76). இவர் சம்பவத்தன்று சிவகாசி பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள வங்கிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரி மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த மூதாட்டி சுப்புத்தாய் சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து சிவகாசி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


