Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

பட்டாசு ஆலையில் காப்பர் கம்பிகளை திருடிய 3 பேர் கைது

சிவகாசி, அக்.17:சிவகாசி அருகே ஊராம்பட்டியில் தனியார் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் பொருத்தப்பட்டிருந்த இடிதாங்கியில் இருந்த காப்பர் கம்பிகளை மர்ம நபர்கள் வெட்டி எடுத்து திருடி சென்றுள்ளனர். இந்த திருட்டு குறித்து பட்டாசு ஆலை நிர்வாகத்தினர் விசாரித்து வந்தனர். தொடர்ந்து பட்டாசு ஆலைக்கு வருபவர்களை கண்காணித்தும் வந்தனர்.

சம்பவத்தன்று மர்ம நபர்கள் நடமாட்டம் குறித்து பட்டாசு ஆலையில் வாட்ச்மேன், மேனேஜர் கண்ணனுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர் சம்பவ இடத்துக்கு வந்த போது ஆலையில் அத்துமீறி நுழைந்து 3 பேர் காப்பர் கம்பிகளை வெட்டி எடுத்து கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து மாரனேரி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியதில், 3 பேரும் அய்யம்பட்டியை சேர்ந்த சுரேஷ், முருகன், வீரபுத்திரன் என தெரிய வந்தது. அவர்களை கைது செய்த போலீசார் காப்பர் கம்பிகளை பறிமுதல் செய்தனர்.