Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் வறட்சியால் குடிநீர் இன்றி தவிக்கும் வன விலங்குகள்

வத்திராயிருப்பு, ஆக. 17: மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் தற்போது போதிய மழையின்றி கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் அங்குள்ள வன விலங்குகள் குடிநீர் கிடைக்காமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலைபகுதி அடர்ந்த வனப்பகுதியாக உள்ளது. இதனை வில்லிபுத்தூர் மேகமலை புலிகள் சரணாலயமாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்த பகுதி சாம்பல் நில அணில்களின் சரணாலயமாகவும் இருந்து வருகிறது. இந்த பகுதியில் போதிய அளவில் வழக்கமாக மழை பெய்யும் என்பதால், மரங்கள் அடர்ந்து வளர்ந்து பசுமை ெபாங்க காட்சி தரும்.

இந்த வனப்பகுதியில் யானை, புலி, மான், காட்டெமை, காட்டுப்பன்றி, மிளா உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த ஆண்டு போதிய மழை இல்லாததன் காரணமாக, மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் இங்குள்ள நீர்நிலைகள் வறண்டு காணப்படுகிறது. இதனால் வனவிலங்குகள் குடிக்க தண்ணீர் கிடைக்காமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.