அருப்புக்கோட்டை, ஆக.17: அருப்புக்கோட்டையில் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு காந்தி நகரில் உள்ள எம்ஜிஆர் மருத்துவமனையில் லெமூரியா அறக்கட்டளை மற்றும் காரியாபட்டி எஸ்பிஎம் டிரஸ்ட் இணைந்து இலவச பொது மருத்துவ முகாம் நடத்தியது. எஸ்பிஎம் நிறுவனர் அழகர்சாமி தலைமை வகித்தார். டாக்டர் பாலமுருகன் முன்னிலை வகித்தார்.
முகாமில் எலும்பியல் மருத்துவர் உமா மகேஸ்வரன், பொது மருத்துவர் ஆஞ்சனு, பல் மருத்துவர் மணிகண்டன் ஆகியோர் சுமார் 150க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு இலவச மருத்துவ பரிசோதனை இசிஜி சோதனை எலும்பு நோய் தேய்மானம் பரிசோதனை செய்து இலவச மருந்து மாத்திரைகளை வழங்கினர். முகாமிற்கான ஏற்பாடுகளை லெமூரியா அறக்கட்டளை நிறுவன டாக்டர் மணிகண்டன் செய்திருந்தார்.



