Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

தேரோட்டத்தை முன்னிட்டு ஆண்டாள் கோயிலில் தூய்மைப் பணி தீவிரம்

ஸ்ரீவில்லிபுத்தூர், ஜூலை 16: தேரோட்டத்தை முன்னிட்டு ஆண்டாள் கோயிலில் தூய்மைப் பணி தீவிரமாக நடந்து வருகிறது. விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோயிலில் வரும் ஆக.14ம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது.

இதையொட்டி கோயில் நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இயந்திரம் மூலம் (ஏர் பில்டர்) கோயில் முழுவதும் தூய்மைப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி சர்க்கரை அம்மாள் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர்.