Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வேடநத்தம் கிராமத்தில் மிரட்டும் எலும்புக்கூடு மின்கம்பம்: புதிதாக மாற்ற மக்கள் கோரிக்கை

திருச்சுழி, மே 16: திருச்சுழி அருகே சேதமடைந்து எலும்புக்கூடுபோல் காணப்படும் மின்கம்பங்களால் விபத்து அபாயம் நிலவுகிறது. இவற்றை அகற்றிவிட்டு புதிய மின்கம்பங்கள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே வேடநத்தம் கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு நடப்பட்ட மின்கம்பங்கள் முறையாக பராமரிக்கப்படாததால் சேதமடைந்து காணப்படுகின்றன. குறிப்பாக மின்கம்பத்தில் சிமென்ட் பூச்சுகள் முழுவதுமாக உதிர்ந்து, உள்ளே இருக்கும் இரும்பு கம்பிகள் துருப்பிடித்த நிலையில் வெளியே தெரிகின்றன.

இதனால் பலத்த காற்று வீசும் போது மின்கம்பம் முறிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே, அசம்பாவிதம் ஏற்படும் முன் மின்கம்பங்களை சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், ‘எங்கள் கிராமத்தில் உள்ள முக்கிய வீதிகளில் மின்கம்பங்கள் மிகவும் மோசமாக உள்ளன. இந்த பாதையில் தான் பள்ளி குழந்தைகள் மற்றும் முதியவர்கள் நாள்தோறும் சென்று வருகின்றனர். மின்கம்பங்கள் எப்போது விழுமோ