Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

ராஜபாளையம் வருகை தந்த தவெக எம்எல்ஏவிற்கு வரவேற்பு

ராஜபாளையம், மே 16: ராஜபாளையம் வந்த தவெக எம்எல்ஏவிற்கு நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சட்டமன்ற தேர்தலில் ராஜபாளையம் தொகுதியில் தவெக சார்பில் ேபாட்டியிட்ட ஜெகதீஸ்வரி வெற்றிபெற்றார். இவர் சென்னை சென்று சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்று சட்டமன்ற கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு நேற்று ராஜபாளையம் திரும்பினார். நகர எல்லையில் அவருக்கு தவெகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ஆதி வழிவிநாயகர் கோயிலில் மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்ற தலைவர் ராம்ராஜ் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து தலைவர்கள் சிலைகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் நகர செயலாளர் சமீர், முத்துராமன், பொருளாளர் அபினேஷ், மாவட்ட இணை செயலாளர் ராஜீவ் காந்தி உள்பட ஏராளமானோர் திரண்டு வந்து உற்சாக வரவேற்பளித்தனர்.