ராஜபாளையத்தில் போதை ஒழிப்பு பேரணி
ராஜபாளையம், நவ. 15: ராஜபாளையத்தில் நடைபெற்ற போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியில் 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். ராஜபாளையத்தில் தன்னார்வ தொண்டு அமைப்பு மற்றும் தனியார் பள்ளி சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் நாட்டு நலப்பணி திட்டம், தேசிய மாணவர் படை மற்றும் சாரணர் சாரணியர் இயக்கத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Advertisement
போதையினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு காந்தி சிலையில் இருந்து புறப்பட்ட பேரணி பழைய பேருந்து நிலையம், மதுரை சாலை போன்ற நகரின் மைய பகுதி வழியாக வந்து பஞ்சு மார்க்கெட் நேரு சிலை எதிரே நிறைவடைந்தது. குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நேரு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
Advertisement