அரசு பெண்கள் பள்ளியில் விழிப்புணர்வு முகாம்
திருப்புவனம், நவ. 15: திருப்புவனம் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது. மாவட்ட முதன்மை நீதிபதி மற்றும் சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவர் அறிவொளி தலைமை வகித் பேசினார். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் ராதிகா முன்னிலை வகித்தார்.
Advertisement
பள்ளித் தலைமை ஆசிரியர் இந்திரா வரவேற்றுப் பேசினார். திருப்புவனம் உரிமையியல் மற்றும் நீதித்துறை நீதிபதி வெங்கடேஷ் பிரசாத் சட்ட விழிப்புணர்வு குறித்து பேசினார். திருப்புவனம் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், வழக்கறிஞர் சங்க தலைவர் சேதுராமச்சந்திரன், செயலாளர் மூவேந்தன் மற்றும் வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.
Advertisement