சிவகாசி, அக்.15: சிவகாசியில் கட்டிடத்தில் பதுக்கிய ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பட்டாசுகள், மூல பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். சிவகாசி மணி நகர் பகுதியில் சிவகாசி டவுன் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்தப் பகுதியில் ஜவுளி கடையின் அருகே உள்ள கட்டிடத்தில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரிக்கப்படுவதாக தகவல் கிடைத்தது.
அங்கு சென்று போலீசார் சோதனை செய்தனர். அந்த கட்டிடத்தில் பட்டாசு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட கருந்திரிகள், பல்வேறு பட்டாசு வெடிகள் என சுமார் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பட்டாசு மூலப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து அதே பகுதியைச் சேர்ந்த சங்கரலிங்கம் மகன் சஞ்சீவ்ராஜ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.


