Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

கத்தியை காட்டி மிரட்டியவர் கைது

சிவகாசி, அக்.15:சிவகாசி விவேகானந்தர் காலனியை சேர்ந்தவர் பூ வியாபாரி கார்த்திக்(29). இவர் கடம்பன்குளம் கண்மாய் கரை பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த மர்மநபர் கார்த்திக்கை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி, பணம் பறிக்க முயன்றார்.

அவர் அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் அந்த நபரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார். விசாரணையில், அவர் சிவகாசி சேனையாபுரம் காலனியை சேர்ந்த முத்து விஜயன் மகன் செல்வம் (24) எனத் தெரியவந்தது. இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப் பதிந்து செல்வத்தை கைது செய்தனர்.