Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

சிறுமிக்கு தாலி கட்டியவர் மீது போக்சோ வழக்கு

சாத்தூர், ஜூலை 15: சாத்தூர் அருகே சிறுமியை திருமணம் செய்தவர் மீது போக்சோவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. சாத்தூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி சத்திரப்பட்டியை சேர்ந்த வீரராஜ் என்பவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் வீட்டுக்கு தெரியாமல் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் செய்து வெம்பக்கோட்டை பகுதியில் தனியாக வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் கர்ப்பமான சிறுமி நேற்று முன்தினம் சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி என அறிந்ததும், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊர்நல அலுவலர் மகாலட்சுமிக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்த ஊர்நல அலுவலர், சிறுமியை திருமணம் செய்து கர்ப்பிணியாக்கிய வீரராஜ் மீது நடவடிக்கை எடுக்குமாறு சாத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வீரராஜ் மீது போக்சோவில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.