Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

தாய், தந்தை இறந்ததால் வாலிபர் தற்கொலை

சிவகாசி, ஜூலை 15: சிவகாசியில் தாய், தந்தை இறந்த விரக்தியில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சிவகாசி பிச்சாண்டி தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் ஜீவானந்தம்(22). இவரது தாய், தந்தை இருவரும் இறந்துவிட்ட நிலையில் முனீஸ்நகர் 2வது தெருவில் வசித்து வரும் உறவினர் சத்யா என்பவரின் வீட்டில் தங்கி கட்டிட வேலைக்கு சென்று வந்துள்ளார்.

மது அருந்தும் பழக்கம் உள்ள ஜீவானந்தம் தாய், தந்தை இருவரும் இறந்துவிட்டதால் வாழ பிடிக்கவில்லை, அவர்களிடம் செல்ல போகிறேன் என்று கூறி வந்துள்ளார். இவர் சம்பவத்தன்று பெரியகுளம் கண்மாயில் உள்ள தண்ணீர் குழாயில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து சிவகாசி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.