Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மது விற்ற 2 பேர் கைது

தேவதானப்பட்டி, ஜூலை 15: தேவதானப்பட்டி அருகே ஜெயமங்கலம் எஸ்.ஐ.முருகபெருமாள் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ஜெயமங்கலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஜெயமங்கலத்தில் இருந்து பெரியகுளம் செல்லும் சாலையில், அந்த வழியாக வந்த குள்ளப்புரம் நல்லமணிநகரைச் சேர்ந்த தர்மராஜ்(43) என்பவரை நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில் அவர் சாக்குபையில் அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்பனைக்காக கொண்டு சென்றது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் மது பாட்டில்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். அதேபோல் ஜெயமங்கலம் காந்திநகர் காலனியில் சோதனை செய்தபோது முத்து(54) என்பவர் அனுமதியின்றி விற்பனைக்காக மது பாட்டில்கள் வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் மது பாட்டில்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.