Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

ராஜபாளையம் ஜூன் 15: ராஜபாளையம் கோட்டத்தில் உள்ள மின் நுகர்வோர்களின் குறைகளை தீர்க்கும் வகையில், ராஜபாளையம் பொன்னகரம் தமிழ்நாடு மின்சார வாரியம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை (ஜூன் 16) காலை 11 மணிக்கு மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இதன்படி விருதுநகர் மின் பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் பாலசுப்பிரமணியம் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் மின் நுகர்வோர்கள் நேரில் கலந்துகொண்டு, மின்துறை தொடர்பாக தங்கள் வீடுகளில் இணைப்பை மாற்றுதல், புதிய இணைப்பு வழங்க தாமதம் ஏற்படுதல் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து மனுக்களை வழங்கி தீர்வு காணலாம். இத்தகவலை ராஜபாளையம் மின் பகிர்மான செயற்பொறியாளர். முத்துராஜ் தெரிவித்துள்ளார்.