ராஜபாளையம், அக். 14: ராஜபாளையம் அருகே உள்ள கீழ ராஜகுலராமன் ரெட்டியபட்டி பகுதியைச் சேர்ந்தவர் குருநாதன் (52). இவர் ராஜபாளையம் அருகே கொல்லங் கொண்டான் பகுதியில் உள்ள செங்கல் சூளை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இரவில் பணியாற்றி விட்டு காலை வீட்டிற்கு செல்ல இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் பொழுது நாய் குறுக்கே வந்தது.
திடீரென்று பிரேக் பிடித்ததில் நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குருநாதன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து சேத்தூர் ஊரக காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


