Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

வாலிபர் மீது தாக்குதல்: போலீஸ் விசாரணை

மானாமதுரை, அக்.14: மானாமதுரை கோர்ட் எதிரே உள்ள பேக்கரியில் வேலை பார்த்து வந்த தொழிலாளர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஒருவருக்கு பீர்பாட்டிலால் குத்து விழுந்தது. மானாமதுரை கீழக்கரையில் உள்ள கோர்ட் எதிரே உள்ள பேக்கரியில் கோவையைச் சேர்ந்த ராஜேஷ் (40), புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயிலை சேர்ந்த தனபாலன்(30) ஆகியோர் வேலை செய்து வந்தனர். இவர்கள் மானாமதுரை பயணியர் விடுதி எதிரே உள்ள ஒரு அறையில் தங்கி இருந்தனர்.

நேற்றுமுன்தினம் இரவு 3 மணிக்கு மது அருந்திய போது இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ராஜேஷை தனபால் பீர்பாட்டிலால் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த ராஜேஷ் மீட்கப்பட்டு, மானாமதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்த புகாரில், மானாமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து தனபாலனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.