Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தீயில் கருகிய கார்கள்

சிவகாசி - சாத்தூர் சாலையில் சக்திவேல் என்பவருக்கு சொந்தமான கார் மெக்கானிக் ஷாப் உள்ளது. இங்கு நேற்று அதிகாலை திடீரென தீ பிடித்து புகை மூட்டம் எழுந்துள்ளது. அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்த நிலையில், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள், பைக்குகளில் தீ கொழுந்து விட்டு எரிந்துள்ளது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் சிவகாசி தீயணைப்புதுறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் தீ விபத்தில் லோடு ஆட்டோ, 3 பழைய கார்கள், 3 பைக்குகள் எரிந்து நாசமாகின. தீ விபத்தில் அங்கு படுத்திருந்த நாய் ஒன்று கருகி பலியானது. தீ விபத்து குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.