ஆய்வுக் கூட்டங்களில் கல்வியாளர்கள் பங்கேற்க கோரிக்கை
சிவகாசி, நவ.12: அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கும்பொருட்டு கல்வித்துறை சார்பில் விரைவில் மண்டல ஆய்வுக் கூட்டங்களை நடத்த அரசு முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. இந்த ஆய்வு கூட்டங்களில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கலந்து கொள்ளும்படி உத்தரவிடப்படுகிறது. ஆனால், உயர் அதிகாரிகளின் முன்னிலையில் அலுவலர்கள் தங்களது கருத்துக்களை தெரியப்படுத்துவது கடினம்.
Advertisement
எனவே, இதுபோன்ற ஆய்வுக்கூட்டங்களில் கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்களையும் பங்கேற்க அனுமதித்தால் சிறந்த ஆலோசனைகள் வழங்கப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம். எனவே, மண்டல அளவில் நடைபெறும் ஆய்வுக் கூட்டங்களில் சமூக ஆர்வலர்கள் பங்கேற்க கல்வித்துறை அதிகாரிகளுக்கு, தமிழக அரசு உத்தரவிட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Advertisement