ராஜபாளையம், செப். 11: ராஜபாளையம் மதுரை ராஜா கடைத் தெருவைச் சேர்ந்தவர் செல்லையா (90). இவரது மகன் பாண்டியன் (34). இவர் மது அருந்தப் பணம் கேட்டுத் தந்தையிடம் அடிக்கடி தொந்தரவு செய்து வந்துள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று வழக்கம்போல் வீட்டிற்கு வந்த பாண்டியன், வீட்டில் இருந்த பொருட்களை எடுத்துச் செல்ல முயன்றுள்ளார்.
அதைத் தடுக்கச் சென்ற செல்லையாவை, அவர் மறைத்து வைத்திருந்த இரும்பு கம்பியால் தலையில் பலமாகத் தாக்கியதுடன் கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இத்தாக்குதலில் படுகாயமடைந்த முதியவர் செல்லையா, தற்போது அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், ராஜபாளையம் வடக்கு காவல் நிலையக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள பாண்டியனைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.


