சிவகாசி, செப். 11: சிவகாசி மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் தெரிவித்துள்ளது, ‘‘சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட கட்டணக் கழிப்பிடங்களில் பொதுமக்களின் சிரமத்தைக் குறைக்கும் வகையில், ஆன்லைன் கட்டண வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் கழிப்பிடக் கட்டணத்தை ரொக்கமாகச் செலுத்துவதற்குப் பதிலாக, அங்கு வைக்கப்பட்டுள்ள க்யூஆர் கோடு ஸ்கேன் செய்து யுபிஐ, கூகுள் பே, போன் பே உள்ளிட்ட டிஜிட்டல் செயலிகள் மூலம் எளிதாக செலுத்தலாம்.
இந்த புதிய வசதியின் மூலம் பொதுமக்களுக்கு விரைவான, பாதுகாப்பான மற்றும் வெளிப்படைத் தன்மையான பணப்பரிவர்த்தனை சேவை உறுதிசெய்யப்படுகிறது. எனவே, பொதுமக்கள் அனைவரும் இந்த ஆன்லைன் வசதியைப் பயன்படுத்தி, சிவகாசி மாநகராட்சியின் தூய்மை மற்றும் சுகாதாரப் பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்’’என்றார்.


