Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

30 மதுபாட்டில்கள் பறிமுதல்

வத்திராயிருப்பு, செப். 11: வத்திராயிருப்பு அருகே மதுபாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்தவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 30 மதுபாட்டில்களைப் பறிமுதல் செய்தனர்.வத்திராயிருப்பு அருகே உள்ள கூமாபட்டி காவல் ஆய்வாளர் சங்கர் மற்றும் காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, ராமசாமிபுரம் அம்பேத்கர் சிலை அருகே டூவீலரில் வந்த கண்ணன் (35) என்பவரை மறித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர், முறைகேடாக விற்பனை செய்வதற்காக மதுபாட்டில்களை வைத்திருந்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, அவரிடமிருந்த 30 மதுபாட்டில்களைப் பறிமுதல் செய்த போலீசார், கண்ணனைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.