காரியாபட்டி, டிச. 10: கரூரில் உள்ள சாரதா நிகேதன் மகளிர் அறிவியல் கல்லூரியில் கடந்த நவம்பர் 25ம் தேதி அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கிடையே மாநில அளவிலான கலை திருவிழா நடைபெற்றது. இதில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடந்தன. இப்போட்டியில் காரியாபட்டி ஒன்றியம் சாலை மரைக்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 4ம் வகுப்பு படிக்கும் மாணவி இந்துமதி கலந்து கொண்டார். இதில் இந்துமதி பேச்சு போட்டியில் மூன்றாவது இடம் பிடித்து வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற மாணவிக்கு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கிராம மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
+
Advertisement


